Categories
தேசிய செய்திகள்

அக்டோபர்-1 முதல் புதிய கல்வியாண்டு தொடக்கம் – அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவ மாணவியர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டது. தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. மேலும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களும் உயர்கல்வி பயில விண்ணப்பிப்பார்கள். இந்நிலையில் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் அக்டோபர் 1 முதல் புதிய கல்வியாண்டு தொடங்கப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

மாணவர் சேர்க்கை நடைமுறைகள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும், தற்போதைய இறுதி ஆண்டு மற்றும் கடைசி கால தேர்வுகளை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

Categories

Tech |