Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 1 முதல் 4 ஆம் தேதி வரை…. கூடுதல் சிறப்பு பேருந்துகள்….. தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!!!!

தசரா திருவிழாவையொட்டி குலசேகரப்பட்டினத்திற்கு அக்.,1 முதல் 10-ந் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரபட்டினம் என்ற ஊரில் தசரா திருவிழா வெகு விமர்சையாக வருடம் தோறும் கொண்டாடப்படும். அந்த ஊரில் உள்ள முத்தாரம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. வருடம் தோறும் தசரா விழாவானது பத்து நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் விரதம் இருந்து அம்மனை வழிபடுவார்கள். வெவ்வேறு மாநிலங்களில் இருந்து பிற மாவட்டங்களில் இருந்தும் தசராவை முன்னிட்டு மக்கள் வருகை புரிவார்கள்.

இதனால் பக்தர்களின் வசதிக்காக தமிழக போக்குவரத்து கழகம் நான்கு நாட்களுக்கு கூடுதல் பேருந்து இயக்க ஏற்பாடு செய்துள்ளது.அதன்படி, சென்னை மற்றும் கோவையில் இருந்து திருச்செந்தூர், குலசேகரப்பட்டினத்திற்கு தினமும் இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். மேலும், தசரா முடிந்து திரும்ப ஏதுவாக அக்..6 முதல் 10 வரை கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Categories

Tech |