Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 10 முதல் மறு அறிவிப்பு வரும் வரை….. ராமேஸ்வரம்- மதுரைக்கு கூடுதல் ரயில் வசதி…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

ராமேஸ்வரம் மற்றும் மதுரை இடையே பயணிகளின் வசதிக்காக வருகின்ற அக்டோபர் பத்தாம் தேதி முதல் கூடுதலாக வாரம் மூன்று முறை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் வசதி அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கி மறு அறிவிப்பு வரும் வரை திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும்.

அதன்படி ராமேஸ்வரம் மதுரை வாரம் மூன்று முறை சிறப்பு கட்டண ரயில் ராமேஸ்வரத்தில் காலை 60 மணிக்கு புறப்பட்டு காலை 10 மணிக்கு மதுரை வந்து சேரும். பின்னர் ராமநாதபுரம், பரமக்குடி மற்றும் மானாமதுரை ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் இந்த ரயிலில் ஒன்பது இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், இரண்டு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் மற்றும் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |