Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 11-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு….. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் 11-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி விருப்பமுள்ளவர்கள் https://tanca.annauniv.edu/tanca21 என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். சேர்க்கை நடைமுறைகள், விண்ணப்ப கட்டணம் மற்றும் சான்றிதழ்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை யும் மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |