Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 21 முதல் 8-11 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு…. மாநில அரசு அறிவிப்பு….!!!!

ஒடிசா மாநிலத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளும் அக்டோபர் 21 ஆம் தேதி முதல் 8 ஆம் வகுப்பிலிருந்து 11 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அனுமதித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று  2வது அலை குறைந்துள்ளதால், ஒடிசா மாநிலத்தில் 21 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. அக்டோபர் 21 ஆம் தேதி முதல் 11 ஆம் வகுப்பிற்கான நேரடி வகுப்புகளும், 25ம் தேதி முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், வகுப்புகள் தொடங்கவிருக்கிறது.

நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக் கவசம் அணிவது, கை சுத்திகரிப்பான்களை பயன்படுத்துவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒடிசா பள்ளி மற்றும் வெகுஜன கல்வி அமைச்சர் சமீர் ரஞ்சன் டாஸ் மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் வெளியிட்டுள்ள கொரோனா தொற்று வழிகாட்டுதலுக்குப் பின்னர், அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், 1 முதல் 7 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான வகுப்புகளை மீண்டும் தொடங்குவது பற்றி எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்று ஒடிசா அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |