Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 29 முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை…. பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் அடுத்தடுத்து பண்டிகைகள் வர இருப்பதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கு பண்டிகை தின விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் அக்டோபர் 29ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை இடைநிலை விடுமுறைக்கு பள்ளிகள் மூடப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கரோனா காரணமாக இழந்த கற்பித்தல் நேரத்தை ஈடு செய்யஅரசிதழ் தவிர அனைத்து விடுமுறை நாட்களையும் ராஜஸ்தான் அரசு ரத்து செய்துள்ளது. பள்ளிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அக்டோபர் 16ஆம் தேதி முதல் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழலில் மாநில வாரியாக பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப் பட்டுள்ளது.

ஆனால் ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், பள்ளிகள் மூடப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா மூன்றாவது அலை 18 வயதிற்கு உட்பட்டவர்களை அதிக அளவு தாக்கும் என்பதால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |