அக்டோபர் 4ஆம் தேதி முதல் ஐந்து முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து அக்டோபர் 4ஆம் தேதி முதல் 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி கர்நாடகா, தமிழகம், ஆந்திரா, உத்தரபிரதேசம் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் முறையான நடவடிக்கைகளை பின்பற்றி 50% மாணவர்களுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்திலும் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்துகொண்டே வருவதால் பள்ளிகளை திறக்க முடிவு செய்து அக்டோபர் 4ஆம் தேதி முதல் ஐந்து முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்ட்வாட் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் தங்களது பெற்றோர்களின் ஒப்புதல் கடிதத்துடன் பள்ளிக்கு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்த கூடாது என அவர் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி முதல் கோவில்கள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.