தொழில் நிறுவனங்கள் வருமான வரி தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.வருமான வரி இணையதளம் செயல்படவில்லை என பயனர்கள் சமூக ஊடகங்களில் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் தொழில் நிறுவனங்கள் நடப்பு ஆண்டிற்கான வருமான வரி தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கானஅவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதி உடன் முடிவடைந்தது.
இதனை தொடர்ந்து பட்டைய கணக்காளர்கள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அக்டோபர் ஏழாம் தேதி வரை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது.