Categories
மாநில செய்திகள்

அக்னிபத் திட்டம்: சென்னையிலும் தொடங்கிய போராட்டம்….. பெரும் பரபரப்பு….!!!!

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக வட மாநிலங்களைத் தொடர்ந்து சென்னையிலும் போராட்டம் தொடங்கி இருக்கிறது. 

4 வருடகால ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் ஆள்சேர்க்கும் “அக்னிபத்” என்ற திட்டத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத்சிங் சென்ற செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினார். 4 வருடங்களுக்கு பின் 25 சதவீதம் பேர் வரையில் மட்டுமே பணியில் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்பதால் நாடு முழுதும் ராணுவத்தில் சேரத் தயாராகும் இளைஞர்கள் பல பேர் இதற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் எதிர்கட்சித் தலைவர்கள் பலரும் இந்த திட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று வலியறுத்தி வருகின்றனர்.

வட மாநிலங்களைத் தொடர்ந்து சென்னையிலும் இன்று போராட்டம் தொடங்கி இருக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள  போர் நினைவுச் சின்னம் அருகில் ராணுவத்தில் சேரத் தயாராகும் பயிற்சி மாணவர்கள் 200க்கும் அதிகமானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடற்தகுதி, மருத்துவப்பரிசோதனை அனைத்தும் முடிந்து இப்போது பயிற்சியில் சேரத்தயாராகும் சூழ்நிலையில் மத்திய அரசு இது போன்ற ஒரு திட்டத்தை கொண்டுவந்து உள்ளது. ஆகவே மத்திய அரசு இந்த திட்டத்தை உடனே திரும்பப்பெற வேண்டும், தமிழக அரசு அதற்கு வலியுறுத்த வேண்டும் என கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |