சமீபத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் ஆட்சேர்ப்பு செயல்முறை தொடங்கியுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு டிகிரி, இன்ஜினியரிங், டிப்ளமோ, 12 முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கடந்த மூன்று நாள்களில் 59 ஆயிரத்து 960 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க ஜூலை 5ஆம் தேதி கடைசி நாள் ஆகும். எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் தங்களுடைய விவரங்களை agnipath vayu.cadc.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.