Categories
தேசிய செய்திகள்

‘அக்னிபாத்’ பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை…. மகிந்திரா குழுமம் புதிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்தப் போராட்டத்தை தணிக்கும் நோக்கத்தில் இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்தில் பணி புரிந்துவிட்டு வருபவர்களுக்கு மஹிந்திரா குழுமம் வேலை தர தயாராக உள்ளது என்று அந்த குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்றுவரும் வன்முறைகள் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது. கடந்த வருடம் இந்த திட்டம் முன்மொழியப்பட்ட போது நான் ஒன்றை கூறினேன். அதையே மறுபடியும் தற்போது கூறுகிறேன். அக்னி வீரர்களின் ஒழுக்கம் மற்றும் திறன்கள் அவர்களை சிறந்த வேலை வாய்ப்பிற்கு ஏற்றதாக மாற்றும். அத்தகைய பயிற்சி பெற்ற திறமையான இளைஞர்களை பணியமர்த்தும் வாய்ப்பை மஹிந்திரா குழுமம் வழங்க உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |