Categories
சினிமா தமிழ் சினிமா

அக்னிஹோத்ரியின் அடுத்த படம்…. தமிழ்நாட்டின் உண்மைகளும் இருக்கும்… வெளியான தகவல்…!!!!!!!

காஷ்மீரில் இந்து பண்டிட்டுகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மையமாக வைத்து சமீபத்தில் திரையில் வெளியாகி பெரும் வரவேற்பை இந்தியா முழுவதும் பெற்ற படம் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’, இயக்குனர் விவேக் அக்னிஹோத்திரி இயக்கிய இப்படத்தில் முக்கிய வேடத்தில் அனுபம் கேர் நடித்திருந்தார். இப்படம் 200 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை புரிந்தது, இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் குழு மீண்டும் அடுத்த படத்தில் இணைவதாக அறிவித்தது.

இந்நிலையில் காஷ்மீர் பைல்ஸ் படத்தை இயக்கிய விவேக் அக்னிஹோத்ரி அடுத்த டெல்லி பைல்ஸ் என்ற தலைப்பில் படம் இயக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். இந்த படத்தில் முகலாயர்கள் ஆட்சி தொடங்கிய ஆங்கிலேயர்கள் ஆட்சி வரை டில்லியை எப்படி எல்லாம் அழித்தார்கள்  என்பதுதான் கதையாம். இது வெறும் தில்லியை பற்றிய படம் மட்டுமல்லாமல் அதோடு தொடர்புடைய மற்ற உண்மைகளும் இடம்பெறும் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டின் பல உண்மைகளைச் சொல்லும் என்கிறார்.

Categories

Tech |