Categories
தேசிய செய்திகள்

அக்னி பாத் திட்டத்தில் அடுத்த சர்ச்சை…. “இதற்கு இந்திய ராணுவம் விளக்கம் அளிக்க வேண்டும்”….. எழுந்து வரும் கோரிக்கைகள்….!!!!!!!!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவத்தில் ஆட்களை சேர்ப்பதற்காக புதிய திட்டமான அக்னி பாத் எனும் திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியது. இந்த திட்டத்தின் படி 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் ராணுவம் கடற்படை விமானப்படை போன்ற முப்படைகளில் சேரலாம். மேலும் இந்த திட்டத்தின் கீழ் பணியில் சேர்வோர்  அக்னி வீரர்கள் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நான்கு வருடங்கள் சேவையாற்ற வேண்டும். நடப்பாண்டில் 46 ஆயிரம் அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின்  இந்த திட்டத்தை ஆதரித்தும், விமர்சித்தும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். அதேநேரம் இந்த திட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இந்த திட்டத்தை அமல்படுத்ததில் மத்திய அரசு  திட்டவட்டமாக இருக்கிறது. இதனை அடுத்து டூத் ஆப் தி டியூட்டி என்னும் இந்த அக்னிபாத்  திட்டத்தின் கீழ் அக்னி வீரர்களை தேர்வு செய்யும் பணி அண்மையில் தொடங்கியுள்ளது. அதன்படி அக்னிபாத்  திட்டத்தின் கீழ் முப்படைகளும் சேர விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்த சூழலில் அக்னி பாத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களிடம் இருந்து ஜாதி மத சான்றிதழ்களை இந்திய ராணுவம் கேட்டிருப்பது சர்ச்சையை ஏற்பட்டிருக்கிறது. இந்திய ராணுவத்தை பொருத்தவரை எஸ்சி, எஸ்டி, ஓபிசி மத ஒதுக்கீடு என எந்த ஒரு இட ஒதுக்கீடும் பின்பற்றப்படுவதில்லை. மெட்ரிக்  அடிப்படையில் மட்டுமே வீரர்கள்  தேர்வு செய்யப்பட்டு வருகின்ற நிலையில் அக்னிபாத்  திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களிடமிருந்து இந்திய ராணுவம் சாதி மத சான்றிதழ்களை கேட்டிருப்பது சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக இந்திய ராணுவம் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |