Categories
தேசிய செய்திகள்

அக்னி வீரர்களுக்கான சம்பளமும் சலுகையும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

அக்னி பாத் வீரர்கள் அனைவருக்கும் சம்பளம் வழங்க வங்கி வசதிகளை வழங்கும் வகையில் பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஐ டி பி ஐ வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, எச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கி, கோடக் மகேந்திரா வங்கி,ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி மற்றும் வந்தன் வங்கி ஆகிய 11 வங்கிகளுடன் ராணுவம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் பன்சி போனப்பா தலைமையில் லெப்டினன்ட் ஜெனரல் வி ஸ்ரீ ஹரி, வங்கிகளின் மூத்த அதிகாரிகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியது .அக்னி வீரர் சம்பளத்தொகுப்பின் கீழ் வழங்கப்படும் பலன்கள் பாதுகாப்பு துறை சம்பளத் தொகுப்பை போன்று இருக்கும் என்றும் மேலும் கூடுதலாக பணி நிறைவின்போது தொழில் முனைவராக மாற விரும்பும் அக்னி வீரர்களுக்கு வங்கிகள் கடன் உதவி வழங்கும் எனவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |