டெல்லியில் நடைபெற்று வந்த ‘அத்ரங்கிரே’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது .
பிரபல நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘அத்ரங்கிரே’ . இந்த படத்தில் தமிழ் திரையுலக நட்சத்திர நாயகன் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் இந்த படத்தில் சாரா அலி கான் நடிக்கிறார் . இந்த படத்தில் நடிகை சாரா அலி கான் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் . இந்த படத்தின் கதை இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பது போல் எடுக்கப்படுகிறது . கொரோனா ஊரங்கிற்க்கு பிறகு இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் முதல் வாரம் தொடங்கியது . சமீபத்தில் டெல்லியில் , ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் அருகே படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது .
அதில் நடிகர் அக்ஷய் குமார் ஷாஜஹான் கெட்டப்பில் வெளியிட்ட அசத்தலான புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவியது . கடந்த வாரம் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களையும் படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர் . இந்நிலையில் டெல்லி, ஆக்ரா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிகர் தனுஷ் ஒரு பாடல் பாடி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது. மேலும் இந்த படம் குறித்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.