நடிகை அபர்ணா பாலமுரளி நடிகர் அக்ஷய் குமாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
மலையாள சினிமா உலகில் பிரபல நடிகையான அபர்ணா பாலமுரளி தமிழில் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம், சூரரைப்போற்று உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். சூர்யாவுடன் சேர்ந்து நடித்த சூரரை போற்று திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இதையடுத்து அண்மையில் இவர் நடிப்பில் வீட்ல விசேஷம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. தற்பொழுது நித்தம் ஒரு வானம், கார்த்தியுடன் இணைந்து ஒரு திரைப்படம் என நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் சூர்யா உடன் இவர் நடித்த சூரரைப்போற்று திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. இத்திரைப்படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் நடிகை அக்ஷய் குமார் நடிக்கிறார். இந்நிலையில் அக்ஷய் குமாரை அபர்ணா பாலமுரளி சந்தித்திருக்கிறார். மேலும் அக்ஷய் குமாருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.
The feeling was overwhelming. Thank you @akshaykumar sir for your time. For being such a joy!! It was a pleasure to see you become Veer.
Forever grateful to my @Sudha_Kongara ma’am for everything ❤️
Missed meeting you @radhikamadan ! Can’t wait to see your magic on screen! ✨ pic.twitter.com/emkdAjLIeq— Aparna Balamurali (@Aparnabala2) June 19, 2022