அக்ஷய திருதியை அன்று தங்கம் வாங்குவது மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நாளில் நாடு முழுவதும் மக்கள் அதிகளவில் தங்க நகைகள் மற்றும் நாணயங்களை வாங்குகின்றனர். இந்த நாளில் செய்யும் செயல்களை நாம் அடிக்கடி செய்வோம் என நம்பப்படுகின்றது. அதனால் இந்த நாளில் அதிக அளவில் தான தர்மம் செய்யவும் அறிவுறுத்தப்படுகின்றது. இந்த அக்ஷய திருதியை சிறப்பாக கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாரத ஸ்டேட் வங்கி செய்திருக்கிறது.
வாடிக்கையாளர் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலமாக நகைகளை வாங்குவதற்கு வங்கி சலுகை வழங்கி இருக்கிறது. மேலும் வாடிக்கையாளர்களின் வங்கியின் கார்டின் மூலம் நகை வாங்கும்போது கேஷ்பேக்கை பரிசாக பெறுவார்கள். இந்நிலையில் எஸ்பிஐ பயன்படுத்தி ஷாப்பிங் செய்வதன் மூலமாக நீங்கள் கேஷ்பேக்கைப் பெற்றுக்கொள்ளலாம். வாடிக்கையாளர்களுக்கு 3000 வரை கேஷ்பேக் கிடைக்கிறது. வைகாசி மாதத்தில் வளர்பிறையில் மூன்றாம் நாள் கொண்டாடப்படும் அக்ஷய திருதியை இந்த முறை மே மாதம் 3 ம் தேதி என்று கொண்டாடப்படுகிறது.
ஜோதிடர்களின் கூற்றுப்படி 2022ஆம் ஆண்டில் அக்ஷய திருதியை செவ்வாய் ரோகிணி நட்சத்திரத்தின் ஷோபன யோகத்தில் கொண்டாடப்படும். சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இது போன்ற சுபகிரக சேர்க்கை நடைபெறுவதாக ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இது தவிர 30 ஆண்டுகளுக்கு பிறகு அக்ஷய திருதியை உபயோகத்தில் வருகின்றது. ஜோதிடத்தில் இந்த நாள் மிகவும் மங்களகரமானது மற்றும் யோகமாக கருதப்படுகிறது. இத்தகைய மங்களகரமான யோகத்தில் நீராடி தானம் செய்வதால் புண்ணியத்தை அடைவது பன்மடங்கு பெருக்குகிறது.