டெல்லியில் ஆண்டுதோறும் காற்று மாசுபாடு பிரச்சினை நிலவி வருவதால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கும் நிலை ஏற்படும். இருப்பினும் காற்று மாசை குறைப்பதற்கு டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் 2023 பிப்ரவரி 28ம் தேதி வரை தடை விதித்து டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.. குளிர்காலங்களில் அதிகரிக்கும் காற்றுமாசுபாட்டை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
Categories