Categories
உலக செய்திகள்

“அக்.15ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால்”… சென்னை மாநகராட்சி வெளியிட்ட செம சூப்பர் அறிவிப்பு…!!!!

அக்டோபர் 15ஆம் தேதிக்குள் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்துபவர்களுக்கு சொத்து வரியில் 5 சதவீதம் தொகை தள்ளுபடி செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. உரிய காலத்திற்குள் சொத்துவரி செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பல வாய்ப்புகளை மக்களுக்கு அறிவித்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் 2022 -2023 ஆம் வருடத்திற்கான முதல் அரையாண்டுக்கான சொத்து வரியில் உயர்த்தப்பட்ட தொகையை இதுவரை செலுத்தாதவர்களுக்கு விதிக்கப்படும்.

இரண்டு சதவீத அபராத தொகையும் தள்ளுபடி செய்வதாக சென்னை மாநகராட்சி அறிவித்திருக்கிறது. இவர்களுக்கு மட்டுமல்ல அக்டோபர் 15ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தாத மக்களுக்கும் இந்த வருடம் மட்டும் அபராதம் செலுத்துவதிலிருந்து விளக்கு அழைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் கடந்த வாரம் சென்னை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 6.90 லட்சம் பேர் சொத்துவரி செலுத்த இருப்பதாகவும் 6.25 லட்சம் பேர் செலுத்தாமல் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையை இதுவரை சொத்துவரிக்கு எதிராக 12,300 மனுக்கள் பெறப்பட்டதாகவும் அதில் பத்தாயிரம் மணுக்கள் மீது தீர்வு காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. மேலும் இந்த வருடம் சொத்துவரி உயர்த்தப்பட்டால் அபராதம் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் ஆனால் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரி செலுத்த தாமதமாகும் பட்சத்தில் அபராதம் தள்ளுபடி செய்யப்படாது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |