Categories
மாநில செய்திகள்

அக்.28 முதல் அக்.31 வரை தேர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி முதல்  31 ஆம் தேதி வரை [நடைப்பெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. கணினி வழியில் நடத்தப்படும் தேர்வில் ஒவ்வொரு பாடத்திற்கும், ஒவ்வொரு நாள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு பணி தேர்வை சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை என் 14/ 2019 நவம்பர் மாதம் 27 ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு வெளியிட்டது. கணினி வழி நடத்திட உத்தேச தேதி அக்டோபர் மாதம் 28- 30-ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தேர்வில் தேர்வு எழுதுபவர்களுக்குரிய அனுமதிச்சீட்டு விரைவில்  வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிகள் கொரோனா பெருந்தொற்று சூழ்நிலையை பொறுத்து, தேர்வு மையங்களில் தயார்நிலை, நிர்வாக வசதி இணைப் பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |