நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மத்திய மாநில அரசுகள் மதிய உணவு வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றன. அதில் சில மாநில அரசுகள் வாரத்தில் நான்கு அல்லது ஐந்து முறை முட்டைகள், பயிர்கள், பால், காய்கறி நிறைந்த சாதம் ஆகியவற்றை குழந்தைகளுக்கு வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளா, ஆந்திர போன்ற மாநிலங்கள் மாணவர்களுக்கு முறையான மற்றும் சத்தான உணவை வழங்கி வருகின்றன.
அந்த வகையில் கேரள அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு பால், முட்டை வழங்கும் திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு திங்கள், வியாழக்கிழமைகளில் பாலும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் முட்டையும் வழங்கப்படவுள்ளது. 4 லட்சம் குழந்தைகள் பயன்பெறவுள்ள இந்த திட்டத்திற்கு ரூ.61.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.