Categories
மாநில செய்திகள்

அங்கன்வாடியில் LKG, UKG மாணவர் சேர்க்கை….. தொடக்கக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எல்கேஜி, யுகேஜி மழலையர் வகுப்புகள் மூடப்படுவதாக ஜூன் மாத தொடக்கத்தில் கல்வித்துறை அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மழலையர் வகுப்பு அரசு பள்ளிக்கு மாறாக அங்கன்வாடியில் நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இருப்பினும் 2381 அரசு பள்ளிகளில் ஒன்றில் கூட எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கப்படாதது பெரும் பேசும் பொருளாக மாறி இருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் எல்கேஜி, யுகேஜி மாணவர் சேர்க்கை 2381 அரசு பள்ளிகளில் நடத்தலாம் என்று தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது. சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும் வரை அங்கன்வாடி பணியாளர்களை கொண்டு தலைமை ஆசிரியர்கள் வகுப்புகளை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கூடுதல் வகுப்பறை இல்லாத அரசு பள்ளிகளில் அங்கன்வாடி வகுப்பறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |