Categories
மாநில செய்திகள்

அங்கன்வாடி ஊழியர்களுக்கு இன்னும் இரண்டே நாட்களில்…. முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று மகளிர் தின விழாவை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவ்வகையில் மகளிர் தினவிழாவில் வாழ்த்து தெரிவித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பேசியபோது, பெண்கள் பெயரில் தொழில் தொடங்கினால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகின்றது. பெண்கள் பலர் தொழில் தொடங்கி நிர்வகித்து வருகிறார்கள். அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நான் முடிவு செய்தேன்.

ஆனால் அப்போதைய தலைமைச் செயலாளர் பல்நோக்கு ஊழியர்கள் என்ற தலைப்பில் பணிநிரந்தரம் செய்யலாம் என்று கூறினார். பெண்கள் எந்த வேலையையும் திறம்பட செய்வார்கள் என முடிவெடுத்தேன். அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்ட மூன்று மாதங்களில் கனமழை பெய்ய தொடங்கியது. அப்போது நிவாரணமாக அரிசி வழங்கும் நிலை உருவானது. அதனால் இரண்டு நாளில் அங்கன்வாடி ஊழியர்கள் வீடுகளுக்குச் சென்று அவரை சேர்த்தனர். நிவாரண நிதியும் வழங்கப்பட்டது.

புதிதாக அங்கன்வாடி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் அவர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை என்று கேட்டு வருகிறார்கள். எனவே இன்னும் இரண்டு நாட்களில் பணி நிரந்தரம் செய்யப்பட்டு அங்கன்வாடி ஊழியர்களுக்கு முழுமையான சம்பளம் கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |