தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 1 முதல் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படுவதால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் அங்கன்வாடி மையங்களில் சூடான மதிய உணவு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2 முதல் 6 வயது குழந்தைகளுக்கு பகல் 11.30 மணி முதல் 12.30 மணி வரை மதிய உணவு வழங்க வேண்டும்.
அங்கன்வாடி களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். முட்டைகளை வீடுகளுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க கூடாது.காலாவதியான தரமற்ற பொருட்களை சமையலுக்கு பயன்படுத்த கூடாது. ஊழியர்கள் அனைவரும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.