Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அங்கன்வாடி மதிய உணவில் பல்லி…. அடுத்தடுத்து வாந்தி எடுத்த குழந்தைகள்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கடலூர் அருகே உள்ள அங்கன்வாடி பள்ளியில்,  பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சபுரம் ஊராட்சி பூதங்கட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர். கடந்த 1 ஆம் தேதி முதல் அங்கன்வாடியில் மதிய உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில், நேற்று தயாரிக்கப்பட்ட மதிய உணவில் பல்லி விழுந்து, அதை கவனிக்காத ஊழியர்கள் அந்த உணவை குழந்தைகளுக்கு வழங்கியுள்ளனர்.

அதனால் மதிய உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் மூன்று குழந்தைகள் வாந்தி எடுத்ததை அடுத்து 17 குழந்தைகளும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து வந்த ஆட்சியர் பாலசுப்பிரமணியன், கோட்டாட்சியர் அதிமன் ஆகியோர் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும் அலட்சியமாக செயல்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Categories

Tech |