2,381 அங்கன்வாடி மையங்களில் LKG, UKG வகுப்புகளுக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் என்ற தமிழக அரசு அறிவிப்புக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அங்கன்வாடி மையங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்து கொள்ளலாம் என்றும் வருடத்திற்கு 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் என்றும் அறிவித்துள்ளது மேலும் இவர்களுடைய பணி முழுக்க முழுக்க தற்காலிகமானது மட்டுமே என்றும், சிறப்பு ஆசிரியர்களுக்கு மாதம் 5000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கவும் பள்ளி மேலாண்மை குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தகுதி வாய்ந்த நபர் இல்லாத போது தொடக்க கல்வி பட்டய படிப்பு தேர்ச்சி பெற்ற பிற நபர்களையும் நியமனம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மழலையர் வகுப்பு ஆசிரியர்களுக்கு ரூ.5,000 மட்டும் மாத ஊதியம் வழங்குவதை ஏற்கமுடியாது எனக் கூறிய அவர், ஒரு பள்ளிக்கு 3 ஆசிரியர்கள் வீதம் 2,381 பள்ளிகளுக்கும் 5,143 மாண்டிசோரி ஆசிரியர்களை இட ஒதுக்கீட்டை பின்பற்றி நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க வலியுறுத்தியுள்ளார்.