Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அங்கன்வாடி மையம் மூடல்…. திணறிய குழந்தைகள்…. பின் நடந்த சம்பவம்….!!!!!

கடலூர் மாவட்டம் கிள்ளை அருகே சி.மனம்பாடி கிராமத்திலுள்ள அங்கன்வாடி மையம் மழைக் காலத்தில் ஒழுகியது. இந்த அங்கன்வாடி மையம் அதே கிராமத்திலுள்ள சமுதாய நலக்கூடத்தில் 3 வருடமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் எம்.ஜி.ஆர். திட்டு நடுநிலைப் பள்ளி சமையலர் ஒருவர், குழந்தைகளை வெளியேற்றிவிட்டு அங்கன்வாடி மையமாக செயல்பட்ட சமுதாய நலக்கூடத்தை இழுத்துமூடினார்.

இதன் காரணமாக என்னசெய்வது என்று தெரியாமல் குழந்தைகள், அருகிலுள்ள வீட்டின் முன்பு அமர்ந்திருந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் ஹரிதாஸ் நேரில் சென்று பார்வையிட்டார். அதன்பின் அவர் பழைய கட்டிடத்தில் அங்கன்வாடி மையத்தை நடத்தலாம் என்றும் மழைக் காலத்தில் மாற்று இடத்தில் செயல்படுத்தபடும் என்றும் தெரிவித்தார். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |