Categories
தேசிய செய்திகள்

அங்கிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா முடிவு?…. பதிலளித்த வெளியுறவுத்துறை மந்திரி…..!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யா போர் நீடித்து வரும் நிலையில், இப்போர் உலக நாடுகளின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரை அடுத்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பல பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதே சமயம் மேற்கத்திய நாடுகள், ஆசிய நாடுகள், வளைகுடா நாடுகள் என்று பல நாடுகளும் இப்போரில் தங்களது நிலைப்பாட்டை கவனமாக கையாண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இப்போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகள் மிகவும் கூர்மையாக கண்காணித்து வருகிறது. இந்த போரில் இந்தியாவை தங்களது பக்கம் கொண்டுவர அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் மற்றும் ரஷ்யா முயற்சித்து வருகிறது. இதனால் சீன வெளியுறவுத் துறை மந்திரி வாங் யீ, இங்கிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி எலிசபெத் ட்ரூஸ், ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் என்று பல நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர் .
இதனிடையில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 2% ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் (ஏப்ரல் 2021 முதல் ஜனவரி 2022 வரை) இந்தியா ரஷ்யாவிடம் இருந்து 7.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் (94.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) 175.90 மில்லியன் டன்கள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து இருந்தது. ஆனால் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கிய பிப்.. மாதம் முதல் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து மேலும் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. இந்தியாவின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ரஷியாவிடம் இருந்து 3 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் சந்தை மதிப்பை விட 20-25 % தள்ளுபடி விலையில் இந்த கொள்முதல் நடைபெற்று உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கொள்முதல் அமெரிக்க டாலரில் இல்லாமல் இந்திய ரூபாயில் நடைபெற்றதாக முதலில் தகவல் வெளியாகிய நிலையில், ரூபாயில் வாங்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவானது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இடையில் கலக்கம் மற்றும் இந்தியாவுடனான உறவில் விரிசலையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியா வந்துள்ள இங்கிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி எலிசபெத் ட்ரூஸ்-ஐ இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் இருவெளியுறவுத்துறை மந்திரிகளும் கூட்டாக செய்தியாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவின் முடிவு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அவற்றிற்கு பதிலளித்து இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியபோது, ஐரோப்பிய நாடுகள் சென்ற மாதம் ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை விட இந்த மாதம் 15 கூடுதலாக வாங்கியுள்ளது. ரஷியாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவது ஐரோப்பிய நாடுகள்தான். இந்தியா எங்கள் கச்சா எண்ணெய் தேவையின் பெரும் பகுதியை மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து தான் வாங்குகிறோம். அதேபோன்று 7.5-8 சதவீதம் கச்சா எண்ணெய்யை நாங்கள் அமெரிக்காவிடம் இருந்து வாங்குகிறோம். எங்களின் கச்சா எண்ணெய் தேவையில் 1 % குறைவாகவே நாங்கள் ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறோம். கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிக்கும்போது நாடுகள் தங்களது மக்களின் நலனுக்கு எது நல்லதோ அந்த முடிவை எடுக்கிறது.
நாம் இப்போது இருந்து அடுத்த 2 முதல் 3 மாதங்கள் காத்திருந்து ரஷ்யாவிடம் இருந்து அதிகளவு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அதிகளவில் வாங்குவது யார் என்று பார்த்தால் அப்பட்டியலில் முதல் 10 இடங்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்காது. நாங்கள் அப்பட்டியலில் முதல் 10 இடங்களில் கூட இருக்கமாட்டோம் என்று கூறினார். உலகளவில் கச்சா எண்ணெய்யை அதிகமாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் ரஷ்யா 3-வது இடத்தில் இருக்கிறது. உலகதேவையில் 10 % கச்சா எண்ணெயை ரஷ்யா உற்பத்தி, ஏற்றுமதி செய்கிறது. அதேசமயம் ரஷ்யா தன் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 27% ஏற்றுமதியை ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கொள்கிறது. ஐரோப்பிய நாடுகளின் தங்களது மொத்த கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தேவையில் 40 % ரஷியாவிடம் இருந்தே பெறுகிறது என்பது கவனிக்கத்தக்கது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையிலும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய்யை வாங்குகிறது.

Categories

Tech |