காட்டு யானை நீண்ட நேரமாக சாலையில் நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த காட்டு யானைகள் அவ்வபோது கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை கெலமங்கலம்-ராயக்கோட்டை சாலையில் நீண்ட நேரமாக நின்றுள்ளது.
இதனை பார்த்ததும் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி விட்டனர். அந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் நீண்ட நேரமாக அங்கேயே நின்று கொண்டிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் சென்றுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.