மதுரை மாவட்டத்தில் 4 மாத கர்ப்பிணியின் கணவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்தார். தற்போது இவருடைய மனைவி 4 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் சதீஷ்குமார் மோட்டார் சைக்கிளில் செம்பட்டிக்கு பக்கத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, அவ்வழியாக வந்த கேரளாவை சேர்ந்த கார் ஒன்று சதீஷ்குமாரின் மோட்டார்சைக்கிளை இடித்து தள்ளியத்தில் அவர் தூக்கி விசப்பட்டுள்ளார்.
இதனால் பலத்த காயமடைந்த சதீஷ்குமாரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.