மைசூரிலிருந்து திண்டுக்கல்லுக்கு சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்ததால் விலை வீழ்ச்சி அடைந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு சாலை பகுதிகளில் தரகுமண்டி இயங்கி வருகின்றது. இந்த தரகுமண்டிகளுக்கு திருப்பூர், திண்டுக்கல்லின் சுற்றுப்புற பகுதிகள், மராட்டியம் உட்பட வட மாநிலங்களில் இருந்து பல்லாரியும், தாராபுரத்தில் இருந்து சின்ன வெங்காயமும் விற்பனைக்கு வருகிறது. சின்ன வெங்காயம் கடந்த மாதம் ரூ.70 வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் பின்பு ரூ. 35 முதல் ரூ. 50 வரை விலை குறைந்து விற்பனையானது.
இந்த நிலையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.25 முதல் ரூ.42 வரை விலை குறைந்து விற்பனையானது. சின்ன வெங்காயம் மைசூரில் இருந்து வரத்தாகிறது. சுமார் 17 டன் சின்ன வெங்காயம் திண்டுக்கல்லுக்கு மட்டும் மைசூரிலிருந்து விற்பனைக்கு வந்தது. இதன் காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்தது. அதேபோல் பல்லாரி சுமார் 300 டன் விற்பனைக்கு வந்தது. இதனை முன்னிட்டு ரூ.7 முதல் ரூ. 20 வரை பல்லாரி விலை குறைந்து விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.