சீனாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மை காய்வதற்குள் அங்கிருந்து வந்த பிளேக் நோய் பரவிவிட்டது என ட்ரம்ப் விமர்சித்துள்ளார்
சீனாவில் இருந்து உலக நாடுகள் முழுவதிலும் பரவிய கொரோனா தொற்று அமெரிக்காவில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதுவரை 28 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றினால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் பொருளாதார ரீதியாகவும் அதிக அளவு இழப்பை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நிலைக்கு காரணம் சீனா தான் காரணம் என அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றங்களை சுமத்தி வருகின்றார்.
அதுமட்டுமன்றி நவம்பர் மாதம் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் கொரோனா ட்ரம்புக்கு தலைவலியாக இருந்து வருகின்றது. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிபர் ட்ரம்ப், “கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து வந்த ஒரு பிளேக் நோய். அதனை அவர்களால் பரவாமல் தடுத்திருக்க முடியும். ஆனால் அவர்கள் தொற்று பரவுவதற்கு அனுமதித்து விட்டனர். அந்த சமயத்தில்தான் நாங்கள் சீனாவுடன் புதிதாக வணிக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டோம். அந்த மை காய்வதற்குள் தொற்று பரவிவிட்டது” எனக் கூறியுள்ளார்