சட்ட விதிமுறைகளை மீறி தடையின்மை சான்று வழங்கியதற்காக ஊராட்சி தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கொண்டரசம்பாளையத்தில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை தாராபுரம் தாலுகா, கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் 26 இடங்களில் வீட்டு மனையை அமைத்து விற்பதற்காக அங்கீகரிக்கப்படாத மனை இடங்களுக்கு சட்ட விதிமுறைகளை மீறி தடையின்மை சான்று வழங்கியதாக உதயகுமார் மீது புகார் எழுந்துள்ளது.
இதனால் 3,28,71,535 ரூபாய் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து முன்னாள் ஊராட்சி தலைவர் உதயகுமார் மீது திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டரான வினோதினி என்பவர் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.