Categories
தேசிய செய்திகள்

அங்கு செஞ்ச மாறி இங்கு செய்ய மாட்டோம் – அமித்ஷா உறுதி…!!

ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டத்தை நீக்கியது போல வடகிழக்கு மாநில சிறப்பு சட்டமும் நீக்கப்படுஎன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக உள் துறை அமைச்சர் அமித் ஷா  தெரிவித்துள்ளார்.

இன்று அருணாச்சலப் பிரதேசம் உருவான நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறும் போது வடகிழக்கு மாநில பகுதிகளில்  உண்மையான வளர்ச்சி நரேந்திர மோடி ஆட்சிக் காலத்தில் தான் நடந்துள்ளது.

இங்கு சட்டப்பிரிவு 371 விதிகள் உள்ளன. ஜம்மு – காஷ்மீர் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது போல நீக்க்கப்படுமென்று தவறான தகவல் பரப்பப்பட்டது.இது அம்மாநிலங்களின் கலாசாரம், சட்டங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  எனவே ஜம்மு காஷ்மீர் போல இங்கு  நடக்காது, எங்களுக்கு அந்த நோக்கமும் கிடையாது என்று உறுதியளித்தார்.

Categories

Tech |