யானை குறித்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அசாம் மாநிலத்தில் உள்ள ராங்ஜீலி பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அருகில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து யானை கூட்டம் ஒன்று வெளியேறி விவசாய பகுதிகளிலேயே தங்கி வருகிறது. அந்த யானைகள் விளைச்சலுக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று திடீரென யானைகள் அப்பகுதிகளில் சென்றுள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி வாலிபர்கள் யானை கும்பலை விரட்டியுள்ளனர். இதனால் அனைத்து யானைகளும் அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்துள்ளது. ஆனால் ஒரே ஒரு யானை மட்டும் தூரத்திய வாலிபர்களை விரட்டி வந்துள்ளது. இந்நிலையில் வாலிபர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். மேலும் இந்த காட்சியை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.