டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் பல மாதங்களாக போராடி வருகின்றனர். இதுகுறித்து அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் கூறுகையில், ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த விவசாயிகள் மட்டுமே போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். மற்றவர்கள் யாரும் விவசாயிகள் கிடையாது. மக்களை தவறாக வழி நடத்தும் செயலை காங்கிரஸ் கட்சியினர் நிறுத்த வேண்டும்.
விவசாயிகளின் இந்த போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. ஹரியான அரசுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிடும் அவர்களுக்குப் பின் யார் இருக்கிறார்கள்? என்பது அனைவருக்கும் தெரியும். இது சமூகத்தை பாதிக்கிறது. சட்டம் ஒழுங்கிற்கு இடையூறு ஏற்பட்டால் அதைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்று தெரிவித்துள்ளார்.