Categories
மாநில செய்திகள்

அங்கோடா லொக்காவின் மரண வழக்கில் சிபிசிஐடி போலீசார் தீவிரம்…!!

தமிழகத்தில் உயிரிழந்த இலங்கை தாதா அங்கோடா லொக்காவின்  மரண வழக்கில் சிபிசிஐடி போலீசார் மீண்டும் தீவிர காட்டம் தொடங்கியுள்ளனர்.

கோவை சேரன் மாநகரில் தலைமறைவாக இருந்த இலங்கை தாதா அங்கோடா லொக்கா கடந்த ஜூலை மாதம் மர்மமான முறையில் இறந்தார். அவருடன் தங்கியிருந்த இலங்கை காதலி அமானி தான்சி , மதுரையை சேர்ந்த வக்கீல் சிவகாமி சுந்தரி, ஈரோட்டை சேர்ந்த தியானஸ்வரன் ஆகிய 3 பேரையும்  அங்கோடா லொக்கா உடலை மதுரைக்கு கொண்டு சென்று எறித்தனர். அங்கோடா லொக்கா மரண தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந் நிலையில் கோவையில்  உயிரிழந்தது அங்கோடா லொக்காதான என்பதை உறுதிப்படுத்த டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டனர். இதற்காக அவரது பெற்றோரிடம் இருந்து ரத்த மாதிரிகள் மற்றும் இலங்கை போலீசாரிடம் உள்ள  அங்கோடா லொக்காவின் கை ரேகை ஆகியவற்றை பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக இப்பணிகள் தாமதமாகின  தற்போது தொற்று குறைந்துள்ளதால் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இலங்கையின கொரோன பாதிப்பு அதிகம் உள்ளதால் ரத்த மாதிரிகள், கைரேகைகளை அனுப்பி வைக்க சிக்கல் ஏற்பட்டுள்ளது.  இது தவிர மாநில அரசின் உள்துறைச் செயலகம்  சார்பில் இவ்வழக்கை கண்காணிக்க ஐஎஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |