Categories
மாநில செய்திகள்

“அங்க ஆள் வரல” அதான் போதைப்பொருள் ஒழிப்புன்னு சொல்றாங்க…. தி.மு.கவை கேலி செய்த சீமான்….!!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் போதை பொருள் இல்லாத தமிழ்நாடு விழா நடைபெற்றது. இதில் 30 லட்சத்திற்கும் அதிகமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று உறுதிமொழி எடுத்தனர். அதன் பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டத்தின் போது போதை பொருளை பயன்படுத்துபவர்கள் மற்றும் அதற்கு துணை போவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்றும் கூறினார்.

இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், எதிர்க்கட்சிகள் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுக அரசை விமர்சித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் தமிழகத்தில் பலர் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவதால் டாஸ்மாக் பக்கம் அதிக அளவில் செல்வதில்லை. மதுபான கடைகளில் வருமானம் குறைந்து விட்டது.

இதனால் கவலையில் இருந்த தமிழக அரசு போதை பொருட்களை ஒழிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறியுள்ளது. மேலும் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை ஒழித்தால் மட்டுமே மதுபான கடைகளின் மூலம் அரசுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் எனக் கேலியாக கூறியுள்ளார்.

Categories

Tech |