Categories
அரசியல் மாநில செய்திகள்

அங்க பாருங்க… இங்க பாருங்க… அப்படி தான சொன்னீங்க ? சொல்லி அடித்த எடப்பாடி …!

சேலத்தில் இன்று பேசிய தமிழக முதல்வர், இன்றைக்கு கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றன. வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் எல்லாம் குறை சொன்னார்கள்.  டெல்லியை பார்… கேரளாவை பார்…  என்றார்கள். இப்போ நீங்க பாருங்க டெல்லியை பாருங்க, கேரளாவை பாருங்க  இப்ப பார்க்க மாட்டேங்கிறாங்க. அன்றைய தினம் சொன்னாங்க… தமிழ்நாட்டுல கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருக்கின்றது. கேரளாவுல பார்த்தா குறைஞ்சு இருக்கிறது. டெல்லியில குறைச்சு இருக்குதுன்னு சொன்னாங்க. இன்னைக்கு எல்லாம் அங்க அதிகமாகிவிட்டது.

மாண்புமிகு அம்மாவின் அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுத்த காரணத்தினாலேயே கொரோனா வைரஸ் தொற்று நோய் குறைக்கப்பட்டு, படிப்படியாக குறைந்து கொண்டிருக்கின்றது. இன்றைக்கு மற்ற மாநிலத்தில் இன்றைக்கு அதிகரித்துக் கொண்டு இருக்கின்ற சூழ்நிலையில், தமிழ்நாட்டில் குடைந்து கொண்டிருக்கின்றது.

இன்றைக்கு படிப்படியாக வேளாண் தொழில் 100% இயங்கி வருகிறது. அதே போல தொழிற்சாலை 100% இயக்கப்படுகிறது. 100% பணியாளர்களை வைத்து இன்றைக்கு தொழிற்சாலை இயங்கி வருகின்றன. இன்றைக்கு படிப்படியாக இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு அரசு கடுமையான முயற்சி எடுத்து வருகிறது, அதற்கு பலன் கிடைத்து கொண்டிருக்கின்றது. வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு தினம்தோறும் என்னைப் பற்றி நினைத்தால் தான் தூக்கம் வரும். இல்லனா தூக்கமே வராது அவருக்கு என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Categories

Tech |