Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அங்க போகவும் தடை போடுங்க… வெறிச்சோடிய சுற்றுலா தளங்கள்… தீவிரமாகும் கட்டுபாடு நடவடிக்கை…!!

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடற்கரை மற்றும் சுற்றுலா தளங்கள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுதிள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்திலுள்ள சுற்றுலா தளங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள சில்வர் பீச்சுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் தடையை பற்றி அறியாத பொதுமக்கள் சிலர் மாலை வேளையில் கடற்கரைக்கு சென்றபோது, காவல்துறையினர் அவர்களை திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். அதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள பாரதி சாலையில் உள்ள நகராட்சி பூங்கா நேற்று திறந்துள்ளது.

இதனால் கல்லூரி மாணவர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் என பலர் பூங்காவில் பொழுதை போக்கியுள்ளனர். மேலும் சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்களை வைத்தும் விளையாடியுள்ளனர். அதில் சிலர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் முககவசம் அணியாமலும் இருந்துள்ளனர். இதனால் சமூக ஆர்வலர்கள் சிலர் இந்த பூங்காவையும் மூட கோரி வற்புறுத்தியுள்ளனர்.

Categories

Tech |