சிவகங்கையில் பெண்ணிடம் நகையை பறித்து விட்டு தப்பி சென்ற வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சீனிவாசா நகரில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். சங்கீதா தன்னுடைய மகளுடன் கடைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வந்தார். சிவகங்கை ரயில்வே மேம்பாலம் அருகே மோட்டார்சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது சங்கீதாவின் இருசக்கர வாகனத்தை 2 வாலிபர்கள் தடுத்து நிறுத்தி சங்கீதாவின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடினர்.
இதுகுறித்து சிவகங்கை காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து பெண்ணிடம் நகையை பறித்து சென்ற வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.