TVS Motors நிறுவனம் தன்னுடைய புது மாடல் ஸ்கூட்டரை கூடிய விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.
புகழ்பெற்ற TVS Motors நிறுவனம் தன்னுடைய புது மாடல் TVS என்டார்க் XT ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த நிறுவனத்தில் சூப்பர் ஸ்குவாட் எடிஷன், ரேஸ் எடிஷன், ரேஸ் XP, ஸ்டாண்டர்ட் என்ற 4 மாடல்களில் வேரியண்ட் கிடைக்கிறது. இந்நிலையில் தற்போது அறிமுகமாகும். TVS என்டார்க் XT மாடல் ஸ்கூட்டருடன் சேர்த்து மொத்தம் 5 வேரியண்ட்டுகள் ஆகும்.
இந்த புது மாடல் ஸ்கூட்டரில் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் புது மாடல்கள் வழங்கப்படுகிறது. அதன்பிறகு எக்ஸ்ட்டீரியர் மற்றும் புது கிராஃபிக்ஸ், பிரத்யேக ஸ்டைல்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் என்டார்க் ட்ரம் பிரேக் மாடலின் விலை 77,000 ரூபாய் ஆகும். இதனுடைய டிஸ்க் பிரேக் வேரியண்டின் விலை 81,500 ரூபாய் ஆகும்.