OPPO நிறுவனம் தனது முதல் கிளாம்ஷெல் ரக ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மடிக்கக்கூடிய ஸ்கிரீன் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. புதிய OPPO போல்டபில் ஸ்மார்ட்போனின் பெயர் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகிவில்லை.
புதிய OPPO ஃபைண்ட் N ப்ளிப் மாடல் அம்சங்களை டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டுள்ளது. டிராகன்ஃபிளை எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வரும் OPPO ஃபைண்ட் N ப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் black, white மற்றும் purple என மூன்று வித நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் OPPO ஃபைண்ட் N ப்ளிப் மாடலில் 2520×1080 பிக்சல் ரெசல்யூஷன் , 6.8 இன்ச் மடிக்கக்கூடிய OLED பேனல், 3.26 இன்ச் வெளிப்புற டிஸ்ப்ளே, 4300 எம்ஏஹெச் பேட்டரி, 32MP பிரைமரி கேமரா, 50MP சென்சார், 8MP அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் OPPO நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலாக- OPPO ஃபைண்ட் N-ஐ அறிமுகம் செய்தது.