Categories
மாநில செய்திகள்

“அசத்தலோ அசத்தல்” இனி விரல் நுனியில் அப்டேட்ஸ்…. முதல்வர் அலுவலகத்தில் டிஜிட்டல் போர்டு…!!!!

தமிழக அரசின் அனைத்து திட்டங்களின் மீதான நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் நிகழ்நிலை புள்ளி விவரங்களுடன் கூடிய மின்னணு தகவல் பலகையை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் ஆன்லைன் தகவல் பலகையை ஏற்படுத்தி, அதன் மூலம் அறிவித்த வாக்குறுதிகள், வெளியிட்ட அறிவிப்புகள், மேற்கொண்ட பணிகளின் முன்னேற்றம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய நிகழ்நிலை புள்ளிவிவரங்களுடன் கூடிய இந்த மின்னணு தகவல் பலகை முதலமைச்சர் அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக தன் அறையில் இருந்தபடியே முதலமைச்சர், இன்றைய காய்கறி விலை நிலவரம், தங்கம் விலை நிலவரம் என அனைத்து விவரங்களையும் ஒரு கிளிக்கில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.

இந்த மின்னணு தகவல் பலகையில் வழக்கமான தகவல்கள் மட்டும் இல்லாமல், துறை வாரியாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து நிகழ்நிலை புள்ளி விவரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த மின்னணு தகவல் பலகை திட்டம் குஜராத், ஆந்திரா, மத்திய பிரதேசம், நாகலாந்து, இமாசலபிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |