சேலத்தில் 31,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் நமக்கு நாமே திட்டத்தை தொடங்கி வைத்த விழாவில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின், திராவிட இயக்க வரலாற்றிலேயே பெரும் பங்கு வகித்த இடம் சேலம். பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டது சேலம் மாவட்டம். கூட்டு குடிநீர் திட்டம், பெரியார் பல்கலைக்கழகம், சேலம் உருக்காலை உள்ளிட்ட திட்டங்களை திமுக அரசு கொண்டு வந்தது.
சேலம் மாவட்டத்திற்கு ஏற்கனவே செய்த திட்டங்களை விட அதிகமான திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. மக்களின் கோரிக்கைகள் அதிகமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. 1,600 கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த அறிவிக்க உள்ளேன். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் டைடல் பார்க் அமைக்கப்படும். சேலம் மாவட்டத்தில் ரூ.520 கோடி மதிப்பில் பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும். ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா விரைவில் அமைக்கப்படும்.