வேலூர் மாவட்டம் காட்பாடியில் வீடுகள்தோறும் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் வீடுகள்தோறும் குழந்தை தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் இவரது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன் தமிழகத்தில் 1305 ஊராட்சிகள் மற்றும் 12570 ஊராட்சிகளில் மட்டுமே போட்டுள்ளார்கள். எனவே அனைத்து ஊராட்சிகளிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எந்த ஊராட்சி 100% தடுப்பூசி போடப்பட்டுள்ளதோ அந்த ஊராட்சி மன்ற தலைவருக்கு வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழாவில் அந்தந்த ஆட்சியரிடம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
விபத்து ஏற்படும் சமயங்களில் உயிரிழப்பை தடுக்க இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தை நாளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். இதற்காக610 மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் எந்த பகுதியில் விபத்து நடந்தாலும் விபத்துக்குள்ளானவரை மருத்துவமனையில் சேர்க்கும் நபருக்கு 5 ஆயிரம் ஊக்கத்தொகை விபத்தில் சிக்கியவருக்கு ஒரு லட்சம் மதிப்பில் சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.