பாரா உலக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி பிரான்ஸ் நாட்டின் சாட்டௌரோக்ஸ் நகரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் SH1 இல் இந்தியாவின் அவனி லெகாரா 250.6 என்ற உலக சாதனை புள்ளியுடன் நேற்று தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார். அவரை தொடர்ந்து இந்தியாவின் ஸ்ரீஹரி தங்கப்பதக்கம் வென்றார்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற பி6 – 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் மற்றும் மணீஷ் நர்வால் ஜோடி சீன ஜோடியான யாங் சாவோ மற்றும் மின் லியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர். இந்த தொடரில் இந்திய அணி வெல்லும் 3-வது தங்க பதக்கம் இதுவாகும்.