புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் 350 குறித்த விவரங்களை ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனரான சித்தார்த்தா லால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மெட்ரோ ரிபெல் என அழைக்கப்படுகிறது. இந்திய சந்தையில் ஹண்டர் 350 குறைந்த விலை ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ரெட்ரோ, மெட்ரோ, மெட்ரோ ரிபெல் என மூன்று வேரியண்களில் புதிய ஹண்டர் 350 மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதன் மூலம் வாலிபர்கள் தங்களுக்கு ஏற்ற பட்ஜெட் மோட்டார் சைக்கிளை வாங்கி கொள்ளலாம். இந்த புதிய ஹண்டர் 350 மாடலில் சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின், 349 சிசி வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை மற்றும் 19.94 hp பவர் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. இந்நிலையில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸை கொண்டுள்ள ராயல் என்பீல்டு ஹண்டர் 350 எட்டு விதமான நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.