இந்தியாவிற்கு புதிதாக வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகிறது.
இந்தியாவிற்காக புதிதாக 170-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 58,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் பிஎச்இஎஸ் நிறுவனம் டிடாகர் வேகன்ஸ் என்ற ரயில் பெட்டி தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ஏலத்தில் பங்கு பெற்றது. அதேபோல் இதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆல்ஸ்டோம் நிறுவனமும், ஹைதராபாத்தை சேர்ந்த மெடியா சர்வோ டிவைவ்ஸ் நிறுவனமும், ஸ்வீட்சர்லாந்தின் ஸ்டட்லெர் நிறுவனமும் சேர்ந்து ஒப்பந்த புள்ளிகளை சமர்ப்பித்துள்ளது. இந்த நிறுவனங்கள் சமர்ப்பித்துள்ள தொழில்நுட்பப் புள்ளிகளை இந்திய ரயில்வே அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர். மேலும் இவர்கள் சமர்ப்பித்துள்ள தொகைக்காண புள்ளிகள் அடுத்து 45 நாட்களில் மதிப்பீடு செய்யப்படும். இந்நிலையில் ஒப்பந்த ஆவணத்தின் படி ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனம் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் படுக்கை வசதியுடன் கூடிய ரயில் மாதிரியை தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும்.
அதன்பின்னர் அந்த நிறுவனத்துக்கு ரயில்களை தயாரித்து வழங்குவதற்காக 26 ஆயிரம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் 32 ஆயிரம் கோடி ரயில்களை பராமரிக்கும் காலமான 35 ஆண்டுகளுக்கு பகுதி பகுதியாக அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் வருகின்ற 2024-ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வருகிறது. மேலும் தற்போது வரை பயணிகள் அமர்ந்து மட்டுமே செல்லக்கூடிய 102 வந்தே பாரத் ரயில்களை பராமரிப்பதற்கான ஒப்பந்தங்களை ரயில்வே வழங்கியுள்ளது. அதில் புதுடெல்லி -வாராணசி, புதுடெல்லி -ஜம்மு காஷ்மீரின் கத்ரா இடையிலான முதல் மற்றும் இரண்டாவது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்த நிலையில் புதிதாக தயாரிக்கப்பட இருக்கும் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் முதல் கட்டமாக புதுடெல்லி-பாட்னா உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.