Categories
கிரிக்கெட் விளையாட்டு

அசத்தல்..! “CSK” இவரதான் ஃபர்ஸ்ட் தூக்கிருக்காங்க… பட் இவர தவறவிட்டுட்டு…!!

பெங்களூரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் CSK அணி உத்தப்பாவை அவரது அடிப்படை தொகையில் ஏலத்தில் எடுத்துள்ளது.

பெங்களூரில் இன்று ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் அங்குள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இதில் 147 இந்திய அணியை சேர்ந்தவர்கள் உட்பட மொத்தமாக 217 வீரர்கள் ஏலத்தில் விடப்பட்டுள்ளார்கள். இவ்வாறு இன்று ஏலத்தில் விடுக்கப்பட்ட வீரர்களை அனைத்து அணிகளும் போட்டி போட்டு வாங்கியுள்ளது.

இந்நிலையில் சிஎஸ்கே அணி முதன் முதலாக உத்தப்பாவை அவருடைய அடிப்படை தொகையான 2 கோடிக்கு வாங்கியுள்ளது. இதற்கிடையே சிஎஸ்கே அணி ரூபிளெசியை ஏலத்தில் தவறவிட்டது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனால் உத்தப்பா கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் csk அணி பல இடங்களில் வெற்றி பெறுவதற்கு முக்கியமாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |